அணியியல் - உவமையணி்

85 

 பயன் உவமை

    "மாரி அன்ன வண்கைத்
     தேர்வேள் ஆயைக் காணிய சென்மோ"                    - புறநா. 133 

 எனவும் வரும்.

     [கார்மேகத்தை ஒத்த கொடைத்தன்மையை உடைய ஆய் வள்ளலைக் காணவருக
 - என்ற இத்தொடரில், மாரியால் விளையும் பயனும், வண்கையால் விளையும் பயனும்
 ஒத்தலின் மாரிவண்கை என்பது பய உவமையாயிற்று.]

     "என இவற்றின்" எனப் பொதுப்படக் கூறிய அதனால் பண்பு முதலியனவே
 அன்றிச் சொற்பொதுமை காரணமாகவும் வரும். அது சிலேடை உவமை என
 முன்னர்க் கூறப்படும்.

     இன்னும் அவ்விலேசானே பண்பு முதலிய ஒவ்வொன்றுமே அன்றி,

    "கான யானை கைவிடு பசுங்கழை
     மீன்எறி தூண்டிலின் நிவக்கும்"                             - குறுந்.54 

 எனப் பண்பும் தொழிலும்,

    "காந்தள், அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி
     கைஆடு வட்டின் தோன்றும்"                            - அகநா. 108 

 எனத்தொழிலும் வடிவும் வண்ணமும் விரவியும் வருதல் கொள்க.

    "விரவியும் வரூஉம் மரபின என்ப"                     - தொ. பொ. 277 

 என்பது ஓத்து ஆகலான். இன்னும் அதனானே,

    "அடைமறை ஆயிதழ்ப் போதுபோல் கொண்ட
     குடைநிழல் தோன்றும்நின் செம்மல்"                        - கலி. 84 

 எனப் பலபொருள் விரவி, அடையும்போதும் குடைக்கும்