88

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [வானம் என்ற ஒரு பொருள் மேனி என்ற ஒரு பொருளுக்கு உவமை.

     பிறை என்ற ஒருபொருள் பற்கள் என்ற பல பொருளுக்கு உவமையாகின்றது.

     சுறாமீன் கூட்டம் என்ற பலபொருட்டொகுதி படை ஏந்திய வீரர் குழாம் ஆகிய
 பல பொருட்டொகுதிக்கு உவமை.

     பெரும் புகழுடைய கரிகாலனை எதிர்த்து நிற்றல் ஆற்றாது வெண்ணிப்
 பறந்தலையில் தம் பெருமையை இழந்து தோற்றோடிய பகை மன்னர்கள், தலைவன்
 வந்தவுடன் செயலற்று ஓடப் போகின்ற வாடையாகிய ஒரு பொருளுக்கு உவமை
 ஆகின்றனர்.]

    "மயில் தோகை போலும் கூந்தல்"

 என்பதன்றிக்

    "காக்கைச் சிறகு அன்ன கருமயிர்"

 எனவும்,

    "புலி போலப் பாய்ந்தான்"

 என்னாது,

    "பூனை போலப் பாய்ந்தான்"

 எனவும் யாதானும் ஒரு முகத்தால் கூறற்க;

    "உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும்"                தொ. பொ. 283 

     என்ப ஆகலின். அவ்வுவமம் கேட்போர் உள்ளம் கொண்டு விளங்கத்
 தோன்றுவதே ஆதல் வேண்டும் என்பார் "ஒப்புமை தோன்ற" என்றார். இங்ஙனம்
 செப்பின் அஃது உவமை எனவே, "பவளம் போலும் செய்யவாய்" என்னும்
 அத்தொடர்ச்சொல் முழுவதூஉம் உவமையாம் என்பதாயிற்று. ஆயினும், பவளமும்
 வாயும் ஒத்த பண்பினவேனும் ஏற்ற இழிபுகளால் வாயில் பவளம் சிறந்தமையானும்,

    "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை"               - தொல். பொ. 278 

     என்ப ஆகலானும் பவளம் உவமை எனவும், வாய்