பொருள் எனவும், செம்மை அவ்விரண்டனையும் புணர்த் தற்கு ஏதுவாகிய பண்பு எனவும், போலும் என்பது அவ்வணியைப் புலப்படுத்துவதோர் உருபு எனவும் வேறு வேறு கூறுபடுத்து உணர்க. பிறவும் அன்ன.
அதன் திறன் உணர்த்தலாவது,
"சிறப்பே நலனே காதல் வலியோடு
அவைநாற் பண்பும் நிலைக்களம் என்ப" - தொல். பொ. 279
"கிழக்கிடு பொருளோடு ஐந்தும் ஆகும்" - தொல். பொ. 280
"முரசுமுழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போலப்
பாடல் பற்றிய பயன்உடை எழாஅல்
கோடியர் தலைவ" - பொருந. 54-57
எனச் சிறப்புப் பற்றியும்,
"ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்" - புறநா. 251
"கண்போல்வான் ஒருவன் உளன்"
"அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின்
திருமா வளவன்" - பட்டின. 298-89
"அரவுநுங்கு மதியின் நுதல்ஒளி கரப்ப"
என ஒரு பொருளினது இழிபு கூறுவான் உவமத்தான் இழிபு தோன்றுவிக்கும் ஆதலின் கீழ்ப்படுக்கப்படும் பொருள்பற்றியும் உவமம் பிறத்தலின் இவை ஐந்தும் பண்பு முதலிய மூன்று உவமைக்கும் நிலைக்களமாம் எனவும், |
|
|