உவமத்திற்கு உரிய விதியே பெறும் எனவும், இன்னோ ரன்ன பிற இலக்கணமும் உவம இயலில் கூறியவாறே உணர்தலும்,
[உள்ளுறை உவமத்தில் உபமானம் மட்டும் கூறப்படும். உபமேயம் உய்த்துணர்வகைத்தாய் அமையும். ஆதலின் உள்ளுறை உவமத்தை உவமப்போலி என்றும் வழங்குப.
"உவமப் போலி ஐந்தென மொழிப" - தொல். பொ. 299
"தவலருஞ் சிறப்பின்அத் தன்மை நாடின்
வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்
பிறப்பினும் வரூஉம் திறத்த என்ப" - தொல். பொ. 800
என உவமப் போலியைத் தொல்காப்பியனார் ஐந்து வகைப்படுத்துவர். ஏனை உவமத்துக்கு இல்லாத பிறப்பு என்ற வகை உள்ளுறை உவமத்துக்குக் கொள்ளப்பட்டது. அவ்வுள்ளுறை கூறுதற்கு உரியார் யாவர் என்பதும், அவ்வுள்ளுறை சிறக்கும் திணைகளும், சிறவாத திணைகளும், தொல்காப்பிய உவமவியற்கண் கூறப்பட்டுள்ளன. உள்ளுறை உவமம் என்ற தலைப்பில் அவற்றைக் காண்.]
"பரல்பகை உழந்த நோயொடு சிவணி
மரல்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள்" - பொருந. 44, 45
என இடத்திற்கு ஏற்ற உவமையும்,
எனக் காலத்திற்கு ஏற்ற உவமையும்,
"கடலும் மலையும் போலக் கரியோய்"
எனப் பொருளுக்கு ஏற்ற உவமையும்,
"புலிநா அன்ன புல்இதழ்த் தாமரை"
எனப் பண்பிற்கு ஏற்ற உவமையும், |
|
|