அணியியல் - உவமையணி

93 

     கற்றாருக்கு மக்களும் கல்லாருக்கு விலங்கும் ஏற்ற இழிவு கருதிய சாதிக்கு ஏற்ற
 உவமைகளாம்.

    "காக்கைச் சிறகு அன்ன கருமயிர்"

    "செம்பருத்தி போன்ற செவ்வாய்"

    "கரவீரம் போன்ற செவ்வாய்"

 என நிறம் பற்றி உவமை கூறுதல் மரபுக்கு ஏற்றதன்று ஆதலின்,மரபு பற்றி
 வழுவாம் ஆதலின் அங்ஙனம் கூறாது,

    "மயில் தோகை போலும் கூந்தல்"

    "கயிரவம் போலும் செவ்வாய்"

    "பவளம் போலும் செவ்வாய்"

 என்று கூறுவதே மரபுக்கு ஏற்ற உவமையாம்;

    "உவமப் பொருளை உணருங் காலை
     மரீ இய மரபின் வழக்கொடு வருமே"                  - தொ. பொ. 290 

 என்பது ஓத்து ஆகலான்.]

ஒத்த நூற்பாக்கள்

    "வினைபயன் மெய்உரு என்ற நான்கே
     வகைபட வந்த உவமத் தோற்றம்".                   - தொல். பொ. 276 

    "விரவியும் வரூஉம் மரபின என்ப".                              - 277 

"உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை."                          - 278 

    "சிறப்பே நலனே காதல் வலியோடு
     அந்நாற் பண்பும் நிலைக்களம் என்ப."                          - 279 

    "கிழக்கிடு பொருளோடு ஐந்தும் ஆகும்."                         - 280 

    "முதலும் சினையும் என்று ஆயிரு பொருட்கும்
     நுதலிய மரபின் உரியவை உரிய."                              - 281 

    "சுட்டிக் கூறா உவமம் ஆயின்
     பொருள்எதிர் புணர்த்துப் புணர்த்தனர் கொளலே."               - 282