"வடிவே வண்ணம் மொழிதன் மையென
நொடிவ கண்ணின் நோக்கிய ஒப்பே". - வீ. 96 உரை மே.
"எழுத்தியல் ஒலியும் எழுத்தில் ஒலியும்என
விழுத்தகு செவியின் வேண்டுஓப்பு இரண்டே" "
"இனிய நாற்றமும் இன்னா நாற்றமும்
துன்னிய மூக்கினில் தோற்றும் பண்பே". "
"அறுவகைச் சுவையின் நாவின் ஒப்பே". "
"நடுவு நிலைமை தண்மை வெம்மை
அறிவு நிலைமை அன்மை விழுப்பம்
நொப்பமும் அழுக்கும் செருசெருப்பு ஒன்பதும்
ஒழிவரும் பெருமை உடம்பின் ஒப்பே" "
"வினையும் பயனும் குலனும் குணனும்
அளவும் நிறனும் எண்ணோடு எழுவகை
பொறியின் ஆட்சியின் நெறியுற நாடலின்
எய்திய வகைஅறிந்து இசைப்பது இயல்பே". "
"மொழிந்த ஏழும் முதலும் சினையும்
பண்பொட பத்தும் ஐவகை சேர்த்திக்
கொண்டே கூறினர் குறிப்புணர்ந் தோரே". "
"இல்பொருள் கேள்வி துணிவே உவமம்
சொல்லிய நன்மையின் சொல்லும் துணிந்தோர்
கருதப் படுவகை தெரிந்துநனி வெறாமை
பொருளும் உறுப்பும் முதலாக் கூறினும்
ஏற்புழி நோக்கி எச்ச மாக
வாய்ப்பக் காட்டுக நூற்பொருள் வழக்கே". "
"அவைதாம்,
பாட்டின் பொருளொடு கூட்டித் தோன்றியும்
பொருவரு வனப்பின் புனைந்துரை யாகியும்
இருவகை இயல்பும் ஏற்ப வருமே". "
"ஒப்பிக்கப் படுவது உவமமும் பொருளும்
ஒப்புடைக் காதல் புகட்சிதன் உயர்பே". "