"அப்பொருள் அதுவாய்க் கிடப்பினும் அதுவே" "
- வீ. 96 உரை மே.
"இரண்டு மூன்று முதலாக் குணங்கள்
திரண்டஒப்பு உவமை திருந்த உடைத்தே" "
"முடிக்கப் படுவதும் மொழிவதும் இருகுணம்
அடுக்க வரினே தலைப்பாடு ஒப்பாம்
கிளர்ந்தன உவமை கேட்போர்க்குத் தகும்என
உளங்கொளும் பெற்றியின் உருபுநனி பெற்றுக்
கண்ணுள் ளதுபோல் காட்டுவன் ஆயின்
ஒண்மை உடையோர் உணர்ந்தனர் கொளலே." "
"அவ்வகைத்து அன்றெனின் ஆதனும் பித்தனும்
ஒவ்வா வானை ஒப்பித் தோனே" "
"நோக்கிய ஒப்பினும் ஒரோ நோன்பொருள்
ஆக்கி உரைப்பது அதிசய ஒப்பே". "
"ஐயமும் துணிவும் ஆக ஒப்புமை
செய்யும் பெறுவர் தெரிந்திசி னோரே". "
எல்லாப் பொருட்கும் எல்லா இயல்பும்
சொல்லார் உவமை ஒருபுடைச் சொல்வர்". "
"உவமைக்கு உவமை வழுஎன மொழிப". "
"நற்பொருள் உவமை தலைமக்கு ஏற்ப;
தீப்பொருள் நிற்கும் பகைமைக்கும் திகழ்ந்தே" "
"அவற்றுள்,
ஈங்குத் தோன்றின ஒப்புமை இதுவெனப்
பாங்குஅறிந்து உரைப்பது பண்பெனப் படுமே" "
"உருவ மாயின் எஞ்சக் கிளத்தல்
இல்பொரு ளிடையும் ஏற்பித் துரைப்பர்
பொருளறு கேள்விப் புலமை யோரே". "
"பண்பும் தொழிலும் பயனும்என்று இவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்த்து்
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை" தண்டி. 31