"பட்டாங் குரைத்தல் புகழ்தல் பழித்தலில் பண்புபயன்
சிட்டார் தொழில் வடிவாதி உவமை செறிந்துறுப்புத்
தட்டா தியலும் பொருளும் உவமமும் சார்பொதுவாய்
முட்டா மலேநிகழ் காரண மும்பெறும் மொய்குழலே". - வீ. 158
ஒப்பி லுவமை இழிபுயர் வோடும் உயரிழிவு
துப்பில் சமமே தலைப்பெயல் கூற்றுத் தொகைவிரிவு
தப்பில் உறழ்ந்து வரலோ டொருவழி ஓர்பொருள்மேல்
செப்புச் சினைமுதல் ஒப்பு மறையென்று தேர்ந்தறியே". - வீ. 159
"உவமையின் வகையே உணருங் காலை
வினைபயன் உறுப்புஉரு என்ற நான்கினும்
தமிதமி நிகழ்ந்தும் தம்மின் விரவியும்
காதல் சிறப்பே நலன்வலி யுடன்இழிபு
ஓதிய ஐந்தும் உறுநிலைக் களனா
இருதிணை ஐம்பால் இவற்றொடு மயங்கியும்
முதலொடு சினைகளின் முறைமையில் பிறழ்ந்தும்
முதல்சினை வினைகுணம் இன்றியும் உயர்ந்தும்
பெருமையும் சிறுமையும் பெற்றியில் சிறந்து
எண்மெய்ப் பாட்டின் எழில்பெற மரீஇ
அகத்தினும் புறத்தினும் அமர்தரு நெறித்தாய்
உரனுடை உரவோர் உளங்கொள முதனூல்
வரன்முறை புணர்க்கும் மாண்பிற் றாகும்". - மா. 92
"அதுவே,
நிறைவினும் குறைவினும் நிகழ்த்துதல் நெறித்தாய்த்
துறைதொறும் பழைமையும் புதுமையும் தோய்ந்து
விரியினும் தொகையினும் விழுமிதின் நடைபெறும்." - 93
"அவற்றுள்,
முக்கியப் பொருள்திறம் முற்றுதல் நிறைவே". - 94
ஒன்றா தியசில ஒப்பது குறைவே". - 95
"அவைதாம்,
வெளிப்படை குறிப்பினும் விழுமிதின் நடைபெறும்". - மா. 99
13-14