"உபமே யத்தியல் உணர்த்திய பின்னர்
உவமப் பொருளியல் உயர்த்தி முடித்தலும்
கவின்அப் பொருட்உறின் கடிநிலை இலவே". - 100
"சிறப்பினும் வரூஉம் திறமுமொன் றுளதே". - 102
"அடையொடு பொருட்குஅடை புணர்க்குமஃ திரட்டை". - 103
"உவமையும் உருபும் தொடர்வழிப் பிறிதுமொன்று
உவமேயப் பொருட்கடை புணர்ப்ப தும்முள". - 104
"மரபினும் வருவதோர் மரபுடைத் தென்ப." - 105
"ஒத்தது வென்றதென்று ஒருபொருட்கு உவமை
வைத்தன வாயொரு தொடர்பினும் வருமே" - 106
"ஏது நுதலிய முதுமொழி யினும்வரும்". - 107
"பிசியினும் புலப்படும் பெற்றிய தாகும்." - 108
"முக்கியப் பொருட்குமுக் கியப்பொருள் உவமை
புணர்ப்பது முதன்மைப் புலனெறி வழக்கே". - 109
"உவமை என்பது உரிக்குணத் தொழிற்பயன்
இவற்றொன்றும் பலவும் இணைந்து தம்முள்
ஒப்புமை தோன்றச் செப்பிய அணியே". - தொ. வி. 328
"இருபொருட்கு ஒப்புமை இயம்புவது உவமை". - ச. 4
"அதுவே, விரியே தொகையே எனஇரு வகைத்தாம்". - 5
"வருணியம் அல்பொருள் வாசகம் தன்மைஇந்
நான்கும் விரிதர நவில்வது விரியே". - 6
"மொழிந்த வருணியம் முதலிய நான்கனுள்
ஒன்றும் பலவும் தொகுவது தொகை அஃது
எண்வகைத் தாக இயலும் என்ப". - 7
"அல்பொருள் புனைவுளி யாகஓர் பொருளையே
உரைப்பது பொதுநீங் குவமை என்ப." - 8
"வாக்கியம் இரண்டனுள் வருணியா வருணியம்
மாறத் தொடுத்தல் புகழ்பொருள் உவமை". - 9
"இருபொரு ளுக்குத் தகுமொப் புமைவெளி யிட்டிலங்க
வருவது உவமை அணியாம்." - குவ. 1