160

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "மிக்க உவமை விரியாது உரையின்
     தொக்கு நிற்பது தொகைஉரு வகமே".                  - வீர. உரை. 160 

    "தொகுத் துரைப்பது தொகைஎனப் படுமே".            - மு. வீ. பொ. 23] 

விரி உருவகம்

     மீட்டு அது விரித்த விரி உருவகம் வருமாறு:

    "கொங்கை முகையாக, மென்மருங்குல் கொம்பாக,
     அங்கை மலரா, அடிதளிரா - திங்கள்
     அளிநின்ற மூரல் அடங்காம், எனக்கு
     வெளிநின்ற வேனில் திரு"

 எனவரும். இவ்விரண்டும் எல்லாவற்றிற்கும் பொது.

     [உவமேயம் உபமானமும் ஒன்று என்று கூறும் உருவகத்திற்கு விரியாக அமையும்
 ஆகிய ஆக முதலிய சொற்களை விரித்து இருப்பது விரிஉருவகமாம். உருவகத்தின்
 பல வகைகளுள்ளும் தொகைஉருவகமும் விரிஉருவகமும் கலந்துவரும் என்பது
 உணரப்படும்.

     "எனக்குக் காட்சி வழங்கிய திருமகள், கொங்கையாகிய மொட்டும் இடையாகிய
 கொம்பும் கையாகிய மலரும் அடியாகிய தளிரும் நிலவுபோன்ற முறுவலும் உடைய
 அணங்காவாள் - என்று தலைவன் பாங்கனிடம் தலைவி இயல்கூறிய இப்பாடலில்,
 கெங்கை முகையாக, மென்மருங்குல் கொம்பாக, அங்கை மலராக, அடி தளிராக
 என்பன விரிஉருவகங்களாக அமைந்துள்ளமை காண்க.

    "கருதிய பொருளைக் கலையின் தொகாமல்
     விரியத் தொடுப்பது விரிஉரு வகமே".                   - வீ. உரை. 160 

     "விரிந்து நிற்பது விரிஎனப் படுமே".                  - மு. வீ. பொ. 24] 

தொகைவிரியுருவகம்

     சொற்றது தொகுத்தும் தொகாதும் ஒருதொடரின் உற்றுவரு தொகை விரி
 உருவகம் வருமாறு: