621. பொருட்குஇடம் செய்யுள் ஆதலின் அதனைத்
     தெரிப்பதும் அதனது திறன்எனல் வரையார்.

     இது மேலதற்கு ஒரு புறனடை கூறுகின்றது.

     இ-ள் :   மேற்கூறிய பொருட்பகுதி இரண்டற்கும் இடம் செய்யுள் ஆதலின்,
 அதனை விளக்கி நிற்பதும் அவ்வணியினது இயல்பு என்று சொல்லுதலை
 நீக்கார் கொள்வர் என்றவாறு.