செய்யுள் உணர்ந்தே அணி உணரவேண்டுதலின், இஃது ஈண்டு ஒருவாற்றான்
அவற்றிற்குப் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது.
இ-ள் : செய்யுள் என்று முன் கூறப்பட்டவற்றை விளங்கக் கூறும்
இடத்து, முத்தகச் செய்யுளும் குளகச் செய்யுளும் தொகைநிலைச் செய்யுளும்
தொகைநிலைச் செய்யுளும் தொடர்நிலைச் செய்யுளும் என
மேல் செய்யுளியலுள் கூறும் பல்வேறு வகைப்பட்ட செய்யுட்களும் நான்காம்
என்றவாறு.