623. அவற்றுள், முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும்.
இது, முத்தகச் செய்யுளது இயல்பு கூறுகின்றது.
இ-ள் : மேல் கூறிய நால்வகைச் செய்யுளுள் முத்தகச் செய்யுள் என்பது தனியே நின்று பொருள் பயந்து முற்றுப்பெறும் என்றவாறு.