624. குளகம் பலபாட்டு ஒருவினை கொள்ளும்.
      இது குளகச செய்யுளது இயல்பு கூறுகின்றது.

     இ-ள் :   குளகச் செய்யுள் என்பது பலபாட்டாய் ஒருவினை கொண்டு முடிவது
 என்றவாறு.

     வினை என்றது ஈண்டு முடிக்கும் சொல்லை, "வினைப் படு தொகுதி"
 இ.வி. 315) என்றாற்போல.