629. கூறிய உறுப்பில் சிலகுறைந்து இயலினும்

     வேறுபாடு இன்றுஎன விளம்பினர் புலவர்.

     இது மேலதற்கு ஒரு புறனடை கூறுகின்றது.

     இ-ள் :   மேல் கூறிய உறுப்பில் சில குறைந்து வரினும் பெருங்காப்பியத்தின்
 வேறுபாடு இல்லை என்று கூறுவர் அறிந்தோர் என்றவாறு.

     குறைதலாவது நாற்பொருளில் குறையாது வருணனைகளில் சில குறைதலாம்;
 என்னை? நால்வகைப் பொருளில் குறைபாடு உடையது காப்பியம் என்றலின்.