631. அவைதாம்,
      ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
      உரையும் பாடையும் விரவியும் வருமே.

     இது மேலனவற்றிற்கு ஓர் ஒழிபு கூறுகின்றது.

     இ-ள் :   மேல்கூறிய பெருங்காப்பியமும் காப்பியமும் ஒருவகைச் செய்யுளானும்
 பலவகைச் செய்யுளானும் உரையும் பாடையும் விரவியும் வரும் என்றவாறு.

     உம்மையான், விரவாது வருதலே வலியுடைத்து எனக்கொள்க.