சொற்றொடர் நிலை
632. செய்யுள் அந்தாதி சொல்தொடர் நிலையே
இது சொல்தொடர்நிலை ஆமாறு கூறுகின்றது.
இ-ள் : ஒரு செய்யுள் இறுதி மற்றொரு செய்யுட்கு முதலாகத் தொடுப்பது சொல் தொடர்நிலைச் செய்யுளாம் என்றவாறு.
அவை கலம்பகம் முதலியன. இவற்றிற்கு இலக்கியம் வந்தவழிக் கண்டு கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.