635. கௌடம் என்பது கருதிய பத்தொடும்
     கூடாது இயலும் கொள்கையது என்ப.


 இது கௌடம் ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் :    கௌடம் என்று சொல்லப்படுவது மேல் கூறிய பத்துக் குண
 அலங்காரங்களோடும் கூடாது நடக்கும் ஒழுக்கம் உடையது என்றவாறு.

     முற்றும்மையை எச்சம் ஆக்கிச் சிலவற்றோடு கூடியும் இயலும் எனக் கொள்க.

     [பொருளின்பம், ஒழுகிசை, உதாரம், சமாதி என்பன இருநெறியாருக்கும் ஒக்கும்.]