636. பொருள்அணி சொல்அணிஎன அலங் காரம்
    இருவகை நெறியான் இயலும் என்ப.

     நிறுத்தமுறையானே அலங்காரம் உணர்த்துவன வற்றுள், இஃது அஃது
 இத்துணைத்து என்கின்றது.

     இ-ள்:    பொருளான் உளதாகிய அணியும் சொல்லான் உளதாகிய அணியும்
 என அலங்காரம் இருதிறத்து இயலான் நடக்கும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.