643, உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
ஒன்றுஎன மாட்டின்அஃது உருவகம் ஆகும்,
நிறுத்த முறையானே உருவக அலங்காரம் கூறுவனவற்றுள் இஃது அதன்பொது இலக்கணம் கூறுகின்றது,
இ-ள் : உவமானப் பொருளையும் உவமேயப் பொருளையும் வேறுபாடு ஒழிவித்து ஒன்று என்பது ஓர் உணர்வு தோன்ற ஒற்றுமை கொளுத்தின், அது மேல் கூறிய உருவகம் என்னும் அலங்காரமாம் என்றவாறு,
|
|
|