இ-ள் : குணம் முதலிய நான்கனுள் யாதானும் ஒன்றனைக் குறித்து ஒருசொல்
ஓரிடத்தின் நின்று பல இடத்து நின்ற சொற்களோடு பொருந்தி அப்பொருளை
விளக்குமாயின், மேற்கூறிய தீவகம் என்னும் அலங்காரமாம். இது செய்யுளின்கண்
முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தும் புலப்படும் என்று கூறுவர் ஆசிரியர்
என்றவாறு.
எனவே, முதல் நிலைத் தீவகம் இடைநிலைத் தீவகம் கடைநிலைத் தீவகம்
என ன்றாம். அவை குணம் தொழில் சாதி பொருள் என்பனவற்றோடு உறழப்
பன்னிரண்டாம்.
(இவ்வணி விளக்கணி எனவும் கூறப்படும்.)