இது நிறுத்தமுறையானே பின்வருநிலை என்னும் அலங்காரம் கூறுகின்றது.
இ-ள் : ஒரு செய்யுளுள் முன்னர் வந்த சொல்லே பின்னர்ப் பலஇடத்து வரினும்,
முன்னர் வந்த பொருளே பின்னர் பல இடத்து வரினும் அது பின்வருநிலை என்னும்
அலங்காரமாம் என்றவாறு.
[இதனைச் சந்திராலோகமும் குவயானந்தமும் பின்வரு
விளக்கணி என்று
குறிப்பிடும்.