650. வன்சொல் வாழ்த்துத் தலைமை இகழ்ச்சி
      துணைசெயல் முயற்சி பரவசம் உபாயம்
      கையறல் உடன்படல் வெகுளி விலக்கல்
      ஐயம் என்ற அவைபதின் மூன்றொடும்
      வேற்றுப்பொருள் சிலேடை ஏதுவும் உளப்பட
      மேற்கூ றியஅதன் விரிஈ ரெட்டே.

 இஃது அதன் விரி இத்துணைதது என்கின்றது

     இ-ள் :   வன்சொல் சொல்லி விலக்குவதூஉம், வாழ்த்தி வைத்து
 விலக்குவதூஉம், வாழ்த்தி வைத்து விலக்குவதூஉம், தன்பால் தலைமை தோன்றக்
 கூறி விலக்குவதூஉம், விலக்குவதற்கு ஏதுவை இகழ்ந்து விலக்குவதூஉம்,
 துணைசெய்வாரைப் போலக்கூறி விலக்குவதூஉம், முயற்சி தேமான்றக்கூறி
 விலக்குவதூஉம், தன்வசம் அல்லாமை தோன்றக்கூறி விலக்குவதூஉம், ஓர்
 உபாயம் காரணமாகக்கூறி விலக்குவதூஉம், வேண்டிய பொருள்மேல் முயலும்
 ஒழுக்கம் இன்மை தோன்றக்கூறி விலக்குவதூஉம், உடன் பட்டார்போல்
 விலக்குவதூஉம், வெகுளி தோன்றக் கூறி விலக்குவதூஉம், இரங்கல்
 தோன்றக்கூறி விலக்குவதூஉம் ஐயுற்றதனை விலக்குவதூஉம் என்று சொல்லப் பட்ட
 பதின்மூன்றோடும், வேற்றுப்பொருள் விலக்கும் சிலேடை விலக்கும் ஏதுவிலக்கும்
 ஆகிய மூவகை விலக்கும் உளப்பட முற்கூறிய முன்னவிலக்கு என்னும்
 அலங்காரத்தின் விரி பதினாறாம் என்றவாறு.