652. கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள் வேற்றுமைப் படவரின் வேற்றுமை; அதுவே குணம்பொருள் சாதி தொழிலொடு புணரும்.
இது, நிறுத்த முறையானே வேற்றுமை என்னும் அலங்காரத்தின் பொது இலக்கணமும் அதன் திறனும் கூறுகின்றது.
29-30
இ-ள் : கூற்றினான் ஆதல் குறிப்பினான் ஆதல் ஒப்புமை உடையவாய் இருப்பன இரண்டுபொருள் தம்முள் வேறுபாடு தோன்ற வந்தால், அது வேற்றுமை என்னும் அலங்காரமாம்; அவ்வேறுபாடு குணம் முதலியவற்றால் கூடும் என்றவாறு.