655, மனப்படும் ஒருபொருள் வனப்புவிதந்துரைப்புழி,
     உலகுவரம்பு இறவா நிலைமைத்து ஆகி
     ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம் ;
     பொருள் குணம் தொழில் ஐயம் துணிவே திரிவுஎனத்
     தெருள்உறத் தோன்றும் வரியினது அதுவே.

     இது நிறுத்தமுறையானே, அதிசய அலங்காலத்தின் பொது விதியும் அதன்விரியும்
 கூறுகின்றது.

     இ-ள் :   கவியால் கருதப்பட்ட ஒரு பொருளது வனப்பு மிகுத்துச்
 சொல்லுங்கால், உலகநடை இறவாத தன்மைத்துஆகி, உயர்ந்தோர் வியப்பத்
 தோன்றுவது அதிசயம் என்னும் அவங்காரமாம். பொருள் அதிசயம்
 முதலிய தெளிவுபெறத் தோன்றும் அறுகூற்று விரியினை உடைத்தாம்
 அவ்வலங்காரம் என்றவாறு.

     [இஃது உயர்வு நவிற்சியணி எனவும், மிகைமொழி எனவும்,
 பெருக்கு எனவும் பெயர் பெறும்.]