658. அபாவம் தானும் அதன்பால் படும் ; அஃது
     என்றும் அபாவமும்1 இன்மையது அபாவமும்2
     ஒன்றின்ஒன்று அபாவமும்3 உள்ளதன் அபாவமும்4
     அழிவுபாட்டு அபாவமும்5 எனஐந்து ஆகும்.

     இது மேலதற்கு ஓர் ஒழிபு கூறுகின்றது.

     இ-ள் :   ஒன்றினது இன்மையும் அவ்வேதுவின் திறத்ததாம். அஃது
 எக்காலத்தும் இல்லாமையும், இல்லாமையது இல்லாமையும், ஒன்றினது இன்மையும்
 அதன்கண் அஃது இன்மையும், ஓரிடத்தும் ஒருகாலத்தும் உள்ள பொருள்
 பிறிதோர் இடத்தும் பிறிது ஒரு காலத்தும் இல்லாமையும், முன் உள்ளது
 அழிவுபட்டு இல்லாமையும் என ஐவகைப்படும் என்றவாறு