இது நிறுத்த முறையானே நுட்பம் என்னும் அலங்காரம் ஆமாறு கூறுகின்றது.
இ-ள் : தெரிந்து வேறுபடக் கிளவாது, குறிப்பினான் ஆதல், தொழிலினான்
ஆதல், அரிதாக நோக்கி உணரும் தொழில் தன்மையை உடையது நுட்பம் என்னும்
அலங்காரமாம் என்றவாறு.
[இவ்வணி நுணுக்கம் எனவும் பரிகரம் எனவும் பெயர் பெறும்.]