662. புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும்
     பழிப்பது போலப் புகழ்புலப் படுத்தலும்
     அவையும் அன்ன என்று அறைநரும் உளரே.

     இது பிறர் மதம் பற்றி மேலதற்கு ஓர் ஒழிபு கூறுகின்றது.

     இ-ள்: ஒன்றனைப் புகழ்ந்தாற்போலப் பழித்து உரைத்தலும், பழித்தாற்போலப்
 புகழ்ந்து உரைத்தலும் என்னும் இவ்விரண்டும் அவ்விலேசத்தின் பாற்படும் என்று
 கூறுவாரும் உளர் என்றவாறு.

     [இக்கருத்து மாான் அலங்காரத்தில் குறிப்பிடப்டவில்லை. இச்செய்திகள்
 நிந்தாத்துதி அலங்காரம், புகழ்வதின் இகழ்தல் அலங்காரம் என இருவேறு
 அணிககாக அந்நூலுள் சுட்டப்பட்டுள்ளன.]