663. நிரல்நிறை முன்னர் நிகழ்த்தியாங்கு இயலும்.

   இது நிறுத்த முறையானே நிரல்நிறை அலங்காரம் ஆமாறு மாட்டெறிந்து
 உணர்த்துகின்றது.

     இ-ள்: நிரல்நிறையது இலக்கணம் ஆண்டுச் சொல்லதிகாரத்துக்
 கூறினாற்போல நடக்கும் ஈண்டும் என்றவாறு.