664. ஆர்வமொழி மிகுப்பது ஆர்வ மொழியே.
இது நிறுத்தமுறையானே ஆர்வமொழி அலங்காரம் ஆமாறு கூறுகின்றது.
இ-ள் : உள்நிகழ்ந்த ஆர்மொழியால், தோன்றிச் சொல்லுவது ஆர்வமொழி என்னும் அலங்காரம் என்றவாறு.
உள் நிகழ்தல் மேல்வரும் அலங்காரத்தால் பெற்றாம்.
[இது மகிழ்ச்சியணி எனவும் கூறப்பெறும்]