இது நிறுத்தமுறையானே சுவை என்னும் அலங்காரத்தினது இயல்பும் அதன்
திறனும் கூறுகின்றது.
இ-ள் : உள்நிகழ்தன்மை புறத்துப் புலனாய் விளங்க எண்வகைப்பட்ட
மெய்ப்பாட்டானும் இயல்வது சுவை என்னும் அலங்காரமாம். அது வீரம் முதலியவாகக்
கூறிய உண்வகைத்தாம் என்றவாறு :
"மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே" என்பது "பொன்னின் இயன்ற குடம்"
என்றாற்போலக் கொள்க ; சுவை வேறு இன்மையின்.
[பொன்னும் குடமும் அதுவாகுகிளவியான் ஒன்றாமாறு போல
மெய்ப்பாடும் சுவையும் ஒன்றாகியனவே என்பது, இம்மெய்ப்பாடு அகத்திணையியலில்,