667. கருதியது கிளவாது அப்பொருள் தோன்றப் பிறிதுஒன்று கிளப்பது பரியா யம்மே.
இது நிறுத்தமுறையானே பரியாய அலங்காரம் ஆமாறு கூறுகின்றது.
இ-ள் : தான் கருதியதனைக் கிளவாது அப்பொருள் தோன்றிப் பிறிது ஒன்றனைச் சொல்லுவது பரியாயம் என்னும் அலங்காரமாம் என்றவாறு.
[இவ்வணி பிறிதின்நவிற்சி யணி எனவும் பெயர் பெறும்.]