671. ஒருவகைச் சொற்றொடர் பலபொருள் பெற்றி
தெரிவுதர வருவது சிலேடை; அதுதான்
செம்மொழி பிரிமொழி எனஇரு திறப்படும்.
இது நிறுத்தமுறையானே சிலேடை அலங்காரம் ஆமாறு உணர்த்துகின்றது.
இ-ள் : ஒரு வகையான் நின்ற தொடர்சொல் பலபொருள்களது தன்மை தெரிய வருவது சிலேடைஅலங்காரமாம். அவ்வலங்காரம்தான் ஒரு வகையான்.
நின்று பலபொருள் படும் செம்மொழிச் சிலேடையும், ஒரு வகையான் நின்ற சொல்லைப் பிரித்துத் தொகை வேறுபடுத்துப் பல பொருள் கொள்ளப்படும் பிரிமொழிச் சிலேடையும் என இரண்டு கூறுபடும் என்றவாறு.
"தான்" என்ற மிகையானே, தொடர்சொல்லே அன்றி ஒருசொல்லே பலபொருள்பெற்றி தெரிதரவரினும்,அவ்வலங்காரமாம் எனக்கொள்க.
[இவ்வணி பலபொருள் சொற்றொடரணி எனவும் கூறப்பெறும். |