673. குணம்தொழில் முதலிய குறைபடு தன்மையின்
      மேம்பட ஒருபொருள் விளம்புதல் விசேடம்.

     இது நிறுத்தமுறையானே விசேடம் என்னும் அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் :   குணமும் தொழிலும் பொருளும் சாதியும் உறுப்பும் முதலாயின
 குறைபடுதல் காரணமாக, ஒரு பொருட்கு மேம்பாடு தோன்ற உரைப்பது விசேடம்
 என்னும் அலங்காரமாம் என்றவாறு.

     [இது சிறப்பணி எனவும் சிறப்புநிலையணி எனவும் கூறப்பெறும்.

     இது சந்திராலோகம், குவலயானந்தம் இவற்றில் சிறிது வேறுபாட்டுடன்
 விளக்கப்பட்டுள்ளது; பிற்சேர்க்கை காண்க.