675. மாறுபடு சொல்பொருள் மாறுபாட்டு இயற்கை விளைவுதர உரைப்பது விரோதம் ஆகும்.
இது நிறுத்தமுறையானே விரோதம் என்ற அலங்காரம் கூறுகின்றது.
இ-ள் : மாறுபட்ட சொல்லானும் பொருளானும் மாறுபாட்டுத்தன்மை விளைவுதோன்ற உரைப்பது விரோதம் என்னும் அலங்காரமாம் என்றவாறு.
[இது தொடை வகையுள் ஒன்றாகிய முரண்தொடை ஆகும்.