இது நிறுத்தமுறையானே புகழாப்புகழ்ச்சி அலங்காரம் கூறுகின்றது.
இ-ள் : பழித்தல் போலும் பாகுபாட்டான் ஒன்றற்கு மேம்பாடு
தோன்ற உரைப்பது புகழப் புகழ்ச்சி என்னும் அலங்காரமாம் என்றவாறு.
[இது நிந்தாத்துதியணி யெனவும் புகழ் மாற்றணி யெனவும் வஞ்சப்புகழ்ச்சியணி
யெனவும் நுவலாச்சொல் கூறப்படும்.
தொன்னூல் விளக்கமும் சந்திராலோகமும் குவலயானந்தமும் பழிப்பது போலப்
புகழ்வதனையும், புகழ்வதுபோலப் பழிப்பதனையும் இவ்வணியுள் அடக்கும்.