இது நிறுத்தமுறையானே நிதரிசன அலங்காரம் கூறுகின்றது.
இ-ள் : ஒருவகையான் நிகழ்வது ஒன்றற்குப் பொருந்திய பயனைப் பிறிது
ஒன்றற்கு நன்மை புலப்பட நிகழ்வது ஆதல், தீமை புலப்பட நிகழ்வது ஆதல் செய்து,
அதனைச் சொல்லுவது நிதரிசனம் என்னும் அலங்காரமாம் என்றவாறு.
[இது சுட்டு எனவும் காட்சியணி எனவும் கூறப்பெறும்.