679. "வினைபண்பு எனும்இவை இருபொருட்கு ஒன்றே
           புணர மொழிவது புணர்நிலை ஆகும்".

     இது நிறுத்தமுறையானே புணர்நிலை அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் :   வினையானும் பண்பானும் இரண்டு பொருளுக்கு ஒன்றே பொருந்தச்
 சொல்வது புணர்நிலை என்னும் அலங்காரமாம் என்றவாறு,

     ஒன்றே மொழிவது என்று ஒழியாது "புணர மொழி வது" என்ற மிகையானே,
 இவ்வலங்காரம் ஒருவினை ஒடுச்சொல் பொருள்படவே வருதல் கொள்க.

     [இவ்வணி ஒருங்கியல் எனவும், உடன் நிகழ்ச்சியணி எனவும், உடன் நவிற்சியணி
 எனவும் கூறப்பெறும்.