681. "இன்னார்க்கு இன்னது இயைக என்றுதாம் முன்னியது கிளத்தல் வாழ்த்துஎன மொழிப".
இது நிறுத்தமுறையானே வாழ்த்து அலங்காரம் கூறுகின்றது.
இ-ள் : இன்ன தன்மையை உடையார்க்கு இன்னது நிகழ்க என்று தாம் கருதியதனை விரிப்பது வாழ்த்து என்னும் அலங்காரமாம் என்றவாறு.
[இஃது ஆசியணி எனவும் கூறப்பெறும்.