683.பாவிகம் என்பது காப்பியப் பண்பே.

     இது நிறுத்தமுறையானே பாவிக அலங்காரம் உணர்த்துகின்றது.

     இ-ள் :பாவிகம் என்று சொல்லப்படுவது பொருள் தொடர்நிலைச்
 செய்யுள்திறத்துக் கவியால் கருதிச் செய்யப்படுவதோர் குணமாம். என்றவாறு.

     அஃதாவது அத்தொடர்நிலைச்செய்யுள் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவது.

     [ஒரே பாடலில் கொள்ளப்படும் ஏனைய அணிகளின் இது வேறாமாறு காண்க.