684. சொல்லணி என்பது சொல்லுங் காலை
     மடக்கும்அதன் வழிப்படூஉம் சித்திர மும்என
     நடக்கும் என்மனார் நயன்உணர்ந்தோரே.

     இது நிறுத்தமுறையானே பொருள்அணி உணர்த்திச் சொல்லணி உணர்த்துவான்
 புகுந்தவற்றுள், இஃது அஃது இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் :   சொல்லான் உளதாகிய அணிஎன்று கூறப்படுவது கூறுமிடத்து மடக்கும்
 அதன்பாற்படும் சித்திரமும் என இருவகைத்தாய் நடக்கும் என்று கூறுவர்,
 அதன்இயல்பை உணர்ந்தோர் என்றவாறு.