686. ஆதி1, இடை2,கடை3, ஆதியோடு இடை4,கடை5,
      இடையொடு கடை6,முழுது7, எனஎழு வகைத்தே.

     இஃது அவ்வாற்றான் அத்துணைத்தாம் என்ற தனையே இவ்வாற்றான்
 இத்துணைத்தாம் என்கின்றது.

     இ-ள் :   முற்கூறிய மடக்கு ஆதிமடக்கும், இடை மடக்கும், கடைமடக்கும்,
 ஆதியோடு இடைமடக்கும் ஆதியோடு கடைமடக்கும் இடையொடு கடைமடக்கும்,
 முழுதும் மடக்கும் என எழுவகைப்படும் என்றவாறு.