688. அடிமுழுதும் மடக்குவது ஆங்குஅதன் சிறப்பே.

     இது மேற்கூறிய மடக்கில் சிறப்பு உடையது இது என்கின்றது.

     இ-ள் :   அடி முழுதும் மடக்குவது மேற்கூறிய மடக்கினுள் சிறப்பு உடைத்து
 எனப்படும் என்றவாறு.

     "அடி முழுதும்" எனப் பொதுப்படக் கூறினாரேனும், இரண்டு அடி மடக்குவதும்,
 மூன்று அடி மடக்குவதும், நான்கு அடி மடக்குவதும் என மூவகைப்படும்.