692. மேற்கோள் ஏது எடுத்துக்காட்டு எனமூன்று
    சாற்றுப ; அவற்றின் பால்படு வழுநிலை
    நிரம்ப உணர்த்த வரம்பில ஆகும்.

       இது பிறன்கோள் கூறி மறுக்கின்றது.

     இ-ள் : மேற்கோளும் ஏதுவும் எடுத்துக்காட்டும் எனவும் மூன்று சொல்லுவர்
 ஆசிரியர். அவற்றின் பகுதிக்கண்ணவாய் வரும் வழுநிலையை ஈண்டு முற்ற உணர்த்த
 அளவின்றிப் பெருகும் என்றவாறு.

     எனவே, ஈண்டு அவற்றை உணர்த்திலம் என மறத்தாயிற்று. அவை நியாயநூல்
 ஆராய்ச்சியின்பால் படுவன ஆதலானும், மதங்கள்தோறும் வேறுபட்டு நிற்றலானும்,
 இன்பத்தை உரைக்கும் வரையறை உடையதாண அணி இலக்கணத்தின்
 பிறிதுபடுதலானும் அவற்றை வேண்டிற்றிலம் என்க.(73)