693. அவற்றுள்,
     பிரிபொருள் சொற்றொடர் செய்யுள்முழுவதும்
     ஒருபொருள் பயவாது ஒரீஇத் தோன்றும் ;
     அதுவே,
     களிப்பினும் பித்தினும் கடிவரை இன்றே.

    இது நிறுத்த முறையானே பிரிபொருள் சொற்றொடரும் அதன் அமைதியும்
 கூறுகின்றது.

     இ-ள் : இதனுள் மேற்கூறிய பதினைந்தனுள், பிரிபொருள் சொற்றொடர் என்று
 சொல்லப்படுவது, ஒரு செய்யுளின் சொற்கள் முழுவதும் ஒரு பொருளாக
 உரைக்கப்படாது பிரிந்து தோன்ற வருவதாம். அதுதானே கள் உண்டு களித்தார்
 கூற்றின்கண்ணும், பித்தினான் மயங்கினார் கூற்றின்கண்ணும் வழு என நீக்கும்
 நிலைமை இன்று என்றவாறு.

     பிரிபொருள்சொற்றொடர் ஒன்றாப் பொருளுடைச் செய்யுள்.