694. மாறுபடு பொருள்மொழி, முன்மொழிந் ததற்கு மாறுபடத் தோன்றி வருமொழித் தாம்;அது காமமும் அச்சமும் கைம்மிகின் உரித்தே. இதுவும் அது.
இ-ள் : மாறுபடு பொருள்மொழி என்பது, முன்மொழிந்த செசற்பொருளோடு மாறுபட்ட பொருள் தோன்றிய மொழியினை உடைத்தாய் வரும். அதுவே, காமம் கைம்மிகுந்தார் கூற்றின்கண்ணும் அச்சம் கைம்மிகுந்தார் கூற்றின்கண்ணும் வழுவாகாது அமைவுடத்து என்றவாறு.