695. மொழிந்தது மொழிதல், கூறியது கூறி
வேறுபட ஒருபொருள் விளக்கா தாகும் ;
விரைவினும் சிறப்பினும் வரைவுஇன்று அதுவே.
இதுவும் அது.
இ-ள் : மொழிந்தது மொழிதல் என்பது, முற் கூறியதனை மீட்டும் கூறி அதனால் வேறுபட ஒரு பொருளை விளக்காதாகும். அதுவே, விரைவின் கண்ணும் சிறப்பின் கண்ணும் கடியப்படாது என்றவாறு. |
|
|