696. ஒருபொருள் துணிய உரைக்க உறுசொல் ஒருபொருட்டு இயைவது கவர்படு பொருள்மொழி; வழுப்படல் இல்வழி வரைவுஇன்ற அதுவே. இதுவும் அது.
இ-ள் : ஒரு பொருளைத் தெளிவுற உணர்த்துதற்குப் பொருந்திய சொல் அதனை ஐயுறம்படி பல பொருள் மேலும் நிற்பது கவர்படு பொருள்மொழியாம். அதுவே, வழுஇல்லாத இடத்துப் பொதுப்பட உரைப்பினும் நீக்குதல் இன்று என்றவாறு.