697. ஒருநிரல் முன்வைத்து, அதன்பின் வைக்கும்
     நிரல்நிறை பிறழ்வது நிரல்நிறை வழு ; அஃது
     உய்த்துஉணர வருவழி உடன்பாடு உடைத்தே.

    இதுவும் அது

     இ-ள் : ஒரு நிரல் முன் எண்ணி வைத்து, அதன் பின் வரும் நிரல் மாறுபட
 வைப்பது நிரல்நிறை வழுவாம். அதுவே, அந்நிரல்நிறை உய்த்து உணரத்
 தோன்றுவதாயின் அமைவு உடைத்து என்றவாறு.