699. யதிவழு என்பது ஓசை அறுவழி
     நெறிபட வாரா நிலைமையது ; அதுவே
     வகையுளி யாயின் வழுவின்று ஆகும்.

     இதுவும் அது.

     இ-ள் : யதிவழு என்று சொல்லப்படுவது, ஓசை கொண்டு தளை அறுக்குமிடத்து
 அறுத்தற்கு அரிதாய் வேறுபட வரும் தன்மையதாம். அதுவே, வகையுளியாகப்
 பிரித்துக் கூறும் இடத்துக் குற்றம் இல்லையாம் என்றவாறு.